Tuesday, January 28, 2014

ஹீரோயின் இல்லாத படம்..!



ஹீரோயின் இல்லாமல் தயாராகிறது மொழிவது யாதெனில்...

 இதுபற்றி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: இப்படத்துக்கு இலக்கிய தமிழில் பெயர் வைக்கப்பட்டது ஏன் என்கிறார்கள். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணமும், இப்படத்துக்கு அப்படியொரு தலைப்பு தேவைப்பட்டதாலும் வைத்தோம்.

சொல்வது என்னவென்றால் என்ற பொருளில் இதன் தலைப்பு அமைந்துள்ளது. நட்பை பற்றி நிறைய கதைகள் வந்திருந்தாலும் இது நட்பை இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லும் படம். உயிரை காப்பாற்றிய நண்பனின் கடனுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்யும் இரண்டு நண்பர்களின் கதைதான் இது. பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தர் மகன் விராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இவர் சென்னை 28 படத்தில் சிவா கோஷ்டியிடம் பந்தயம்கட்டி கிரிக்கெட் பேட்டை ஜெயித்து எடுத்துச்செல்லும் சிறுவனாக நடித்தவர். இக்கதைக்கு ஹீரோயின் அவசியப்படவில்லை என்பதால் தேர்வு செய்யவில்லை. ராஜன், ரியாஷ், தேஜ், மீனுகார்த்திகா, லஷ்யா, பாலு ஆனந்த் உள்பட பலர் நடிக்கின்றனர், நித்யன் கார்த்திக் இசை அமைக்கிறார்.

ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்கிறார். கே.ஆர்.மாணிக்கவாசகம், பழனிச்சாமி, எஸ்.வி.தீபாராணி தயாரிக்கின்றனர். ஈரோடு, சென்னை, புதுச்சேரியில் ஷூட்டிங் நடந்துள்ளது.

0 comments:

Post a Comment