Tuesday, January 28, 2014

பனிக்காலத்தில் மூக்கு அடைப்பா? ஆவி பிடிப்பது பெஸ்ட்...!




பனிக்காலத்தில் காது, மூக்கு அடைத்துக் கொள்வதற்கு காரணம் அலர்ஜி.

அது தொடர்ந்தால் காதுக்கும் மூக்குக்கும் இடையே உள்ள சதைகள்  வீங்கிவிடும். இதனால்தான் காது, மூக்கு அடைத்துக் கொள்கிறது.

இப்போதெல்லாம் மூக்கடைப்புக்கு விதவிதமான ஸ்ப்ரே மருந்துக் கடைகளில்  கிடைக்கின்றன.

அதையும் டாக்டரின் பரிந்துரையின் பேரில்தான் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

பனிக்காலம் முழுக்க இந்தப் பிரச்னை தொடர்ந்தால் டாக்டரிடம்  பரிசோதித்துக் கொள்வது நல்லது.

எப்போதாவது ஒருமுறை என்றால் காலை, மாலை இருவேளையும் வெறும் வெந்நீரில் ஆவி பிடிப்பது பெஸ்ட்.  ஆவி பிடிப்பதால் சதைகளின் உள்ளே உள்ள வீக்கம் குறையும்.

சுவாசிப்பதில் உள்ள பிரச்னை சரியாகும்.

0 comments:

Post a Comment