Thursday, January 30, 2014

அனேகன்’ படத்தில் தனுஷ் நடிக்கும் நான்கு கெட்டப்புகள் - வெளியானது...அனேகன்’ படத்தில் தனுஷ் நடிக்கும் நான்கு கெட்டப்புகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் தனுஷ் மாறுபட்ட நான்கு வேடங்களில் நடிக்கிறார், அந்த நான்கு கதாபாத்திரங்கள் என்னென்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது.

சுருட்டை முடியுடன் நவநாகரீக இளைஞனாக ஒரு கதாபாத்திரம் என்றால், புரூசிலியை போன்று மற்றொரு கதாபாத்திரம், மூன்றாவது கதாபாத்திரம், ’குட்டி’யை போன்ற க்யூட் கெட்டப்.

காசிமேடு பின்னணியில் வரும் நான்காவது சர்ப்ரைஸ் கதாபாத்திரம் தான் இந்தப்படத்திற்கு ஹைலைட்டாம்.

ஆக மொத்தத்தில் மாறுபட்ட ஒரு படத்தை தர இருக்கிறார் கே.வி.ஆனந்த்.

‘டி டே’ படம் தமிழில் வெளியாவதா? ஸ்ருதி கடும் எதிர்ப்பு!.
இப்போதும் தெலுங்கில் முன்னணி நடிகை போட்டியில் இருக்கும் ஸ்ருதிஹாசன் ‘டி டே’ என்ற பாலிவுட் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப் திட்டமிட்டுள்ள நிலையில் .

தன்னுடைய அனுமதி இல்லாமல் இப்படம் வெளியாகிறது என்றும், அது தன்னுடன் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக ஸ்ருதி தெரிவித்துள்ளா.

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் ‘டி டே’. இதில் பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகள் மும்பை ரசிகர்களை அதிர வைத்தது.

 இப்படத்தை நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். தற்பொழுது இப்படத்தை தமிழில் ‘தாவூத்’ என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. பிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் இதனை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

 தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான ‘ரா’ அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதையில் பாலியல் தொழிலாளியாக சவாலான வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.

ஆனால் இப்படம் தமிழில் வெளியாவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் இப்படம் வெளியாகிறது என்றும், அது தன்னுடன் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

 இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விவரங்கள் தயாரானவுடன் அது ஊடகங்களில் வெளியிடப்படும் என அவர் கூறினார்.

நயன்தாராவை நம்ம ஆளுன்னு சொல்லும் சிம்பு..அப்படினா ஹன்சிகா? பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு 'இது நம்ம ஆளு' என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது. சிம்புவிற்கு ஜோடி யார் என்பது குறித்து பெரிய விவாதம நடைபெற்று வந்தது.

நயன்தாரா தான் நாயகி என்று ட்விட்டர் தளத்தில் இயக்குநர் பாண்டிராஜ் அறிவிக்க, அன்று முதல் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு எகிறியது.

சிம்பு - நயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தன. படப்பிடிப்பு தளத்தில் இருவருமே நண்பர்களாகவே வலம் வந்து இருக்கிறார்கள். தங்களுக்குள் எதுவுமே நடக்காதது போல் இருவருமே நடந்து கொண்டதை படக்குழு ஆச்சர்யத்தோடு பார்த்தது.

சிம்புவுக்கு லவ் ஃபெயிலியர். அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு தான் நயன்தாரா. நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்காக அஞ்சு, ஆறு மாசம் காத்திருக்காங்க. அப்போ ரெண்டு பேருக்கும் இடையில் பூக்கும் காதல் தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்னைகள்... இது தான் படத்தோட கதை.

இப்படத்தில் நயன்தாராவை நாயகி ஆக்குவதற்கு முன்பு, 'கதவைத் திற காதல் வரட்டும்’ அல்லது 'லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு’ தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து இருக்கிறார் பாண்டிராஜ். நயன்தாராவை நாயகி ஆனவுடன் தற்போது 'இது நம்ம ஆளு' வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். ஏனென்றால் படத்தில் நயன்தாராவைப் பார்க்கும் போது எல்லாம் 'இது நம்ம ஆளு சார்' என்று கூறிக்கொண்டே இருப்பாராம். அது தான் தலைப்பிற்கு காரணமாம்.

ஹன்சிகா அப்படினு ஒருத்தங்க இருக்காங்களா.....?

லவ் யூ பிரதர்"- விஜய்யின் இந்த பாசத்தால் நெகிழ்ந்த தனுஷ் ..... சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம் ஃபேர் வென்ற தனுஷிற்கு, நடிகர் விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சிம்புவிற்கு தல என்றால், தனுஷிற்கு தளபதி என்ற பேச்சுகள் உறுதியாகி கொண்டே இருக்கிறது. ஜனவரி 4ம் தேதி விஜய், தனுஷ் இருவருமே சந்தித்து நீண்ட நேரம் பேசினார்கள்.

விஜய்யை சந்தித்து உரையாடித்தை தனுஷ் மிகுந்த சந்தோஷத்துடன்,"இளைய தளபதி விஜய்யை சந்தித்தேன். அவரோடு ஆடினேன், பாடினேன். நிறைய பேசினேன். லவ் யூ பிரதர்"என்று ட்விட்டர் தளத்தில் கூறினார். அதுமட்டுமன்றி விஜய்யோடு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற பிலிம் ஃபேர் விருதுகள் விழாவில், சிறந்த புதுமுக நடிகருக்கான விருது 'ராஞ்சனா' படத்திற்காக தனுஷிற்கு கிடைத்தது.

பிலிம் ஃபேர் வென்ற தனுஷிற்கு விஜய் தனது வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார். மலர் கொத்து ஒன்றை அனுப்பி வைத்து, தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.

விஜய்யின் இந்த பாசத்தைப் பார்த்து தனுஷ் மிகவும் நெகிழ்ந்து விட்டாராம்.

விண்வெளியில் பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டர் – இந்திய இன்ஜினியரின் கண்டுபிடிப்பு!விண்வெளி வீரர்களுக்கு சுடச்சுட பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டரை அமெரிக்காவில் உள்ள இந்திய இன்ஜினியர் உருவாக்கியுள்ளார்.இந்த 3டி பிரின்டர் 30 ஆண்டு காலம் உழைக்கும் திறன் படைத்தது.

 விண்வெளியில் நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் போதும், இந்த இயந்திரம் உணவு தேவையை ஈடுகட்ட மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

விண்வெளி பயணம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு பலவிதமான பாக்கெட் உணவுகள் மற்றும் டின் உணவுகள், குளிர் பானங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இருந்தாலும் அவைகள் சரிவிகித ஊட்டச்சத்து உணவாக அமைவதில்லை. மேலும், விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி நீண்ட கால ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உணவுப் பொருட் களை விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது.

விண்வெளியிலேயே உணவு தயாரிக்கும் நவீன இயந்திரத்தை உருவாக்க அமெரிக்காவின் நாசா மையம் விரும்பியது.

இதற்காக நாசா விடுத்த டெண்டரை, அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள இந்திய மெக்கானிக்கல் இன்ஜினியர் அஞ்சன் என்பவர் நடந்தும் ‘சிஸ்டம்ஸ் அண்ட் மெட்ரியல்ஸ் ரிசர்ச் கார்பரேஷன்’ (எஸ்.எம்.ஆர்.சி) என்ற நிறுவனம் ஸி78 லட்சத்துக்கு கடந்த ஆண்டு பெற்றது.

விண்வெளியில் சுடச்சுட பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டரை, அஞ்சன் உருவாக்கியுள்ளார்.

இங்க் ஜெட் கலர் பிரின்டரில் இருக்கும் காட்ரிட்ஜ்கள் போல இந்த 3டி பிரின்டரில் இருக்கும் காட்ரிட்ஜ்களில் மைதா மாவு, தக்காளி பவுடர், சமையல் எண்ணெய், தண்ணீர், புரோட்டீன், மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ், ஸ்டார்ச், மசாலா மற்றும் நறுமண பவுடர்கள் இருக்கும்.

பட்டனை கிளிக் செய்தால் போதும், 3டி பிரின்டர் முதலில் மாவை தண்ணீரில் கலக்கி, கீழே பொருத்தப்பட்டுள்ள சூடான தகட்டில் ஸ்பிரே செய்யும்.

அது வெந்து கொண்டிருக்கும்போதே, தக்காளி பவுடர், எண்ணெய், ஸ்டார்ச், புரோட்டீன், மசாலா என ஒவ்வொரு பொருட்களையும் 3டி பிரின்டர் அடுக்கடுக்காக ஸ்பிரே செய்யும். 70 வினாடிகளில் சூடான பீட்சா தயாராகிவிடுமாக்கும் .

வீடியோ லிங்க்:http://www.youtube.com/watch?v=uphIwHFz0no

Wednesday, January 29, 2014

கைப்பேசிகளில் அழிந்த தரவுகளை மீட்க வேண்டுமா..?

கைப்பேசிகளில் அழிந்த தரவுகளை மீட்க வேண்டுமா..?

கைப்பேசிகளில் உண்டாகும் வைரஸ் தாக்கங்களால் அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அழிந்து போவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன இதனால் ஏற்படும் தரவு இழப்பினை தவிர்ப்பதற்கு பேக்கப் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.

இதனையும் தாண்டி அழிவடைந்த தரவுகளை மீட்டுக்கொள்வதற்கு phoneMine எனும் மென்பொருள் உதவியாக காணப்படுகின்றது. இதன் மூலம் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றினையும் அழிந்த மின்னஞ்சல்கள், தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றினையும் மீட்கக்கூடியதாக இருக்கின்றது.

தரவிறக்கச் சுட்டி:-

hotdownloads2.com/trialware/download/Download_Amrak.PhoneMiner.Setup.v.2.3.2.msi?item=34333-4&affiliate=49466

பவர் கட்டில் இருந்து இந்தியா விடுதலை பெறும் நேரம் விட்டது..!ஐஐடி மெட்ராஸ் ஒரு புது வகையான மின்சார பிராஜக்ட்டை இவ்வளவு நாள் சைலென்டாய் செய்து இப்போது அதை செயல்படுத்த உள்ளது. அதாவது மெல்லிய அழுத்தம் கொண்ட டிசி லைன்களை உங்கள் வீட்டிற்குக்கு கனெக்ஷன் தர போகிறது மின்சார வாரியம்.

 இது ஆங்காங்கே இருக்கும் சப்ஷ்டேஷன் மூலம் இதனை உங்கள் வீட்டின் எக்ஸ்ஸிட்டிங் லைன்களின் கூட அல்லது புதிதாகவும் கொடுக்க உள்ளது. இதன் மூலம் 3-5 லைட்கள், இரண்டு மின் விசிறி மற்றூம் ஒரு சார்ஜர் பாயின்ட் வேலை செய்யும். இதையொட்டி பெரும் மின்சார பிரச்சினையின் போது மின்சார லைன்களை ஷ்ட் டவுன் செய்வார்கள் ஆனால் இந்த டிசி லைன்களை பதிந்துவிட்டால் ஷட் டவுன் இல்லவே இல்லை.

அத்துடன் பழுதை 100 வாட் டிசி லைனில் அப்படியே பார்க்க முடியும். அப்படியே 220 வோல்ட் ஏசி லைன் ஷட்டவுன் செய்தால் கூட இந்த டிசி லைன்கள் அந்த வீட்டில் வேலை செய்யும். அதன் மூலம் அத்தியாவாசிய தேவையான சில விளக்குகள் / மின்விசிறி மற்றும் மொபைல் சார்ஜர் பாயின்ட் வேலை செய்யும். இதனை இன்ஸ்டால் செய்ய வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே.

மிக விரைவில் தமிழ் நாடு / ஆந்திரா / கேரளா மற்றூம் கர்னாடாகா மின்சார நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஆகி இந்த பிராஜக்ட் ஆரம்பிக்க படுகிறது. இதனை வடிவமைத்தவர் தமிழர் மின்சார பொறியாளர் பேராசிரியர் – பாஸ்கரன் ராம மூர்த்தியாகும். இதை இப்போது செயல்படுத்த அந்த அந்த ஏரியாவுக்கு அதிகாரிகள் விஜயம் செய்து விரும்பிய கஸ்டமர்களுக்கு உடனே பொருத்தியும் தருகின்றனர் என்பது கூடுதல் மகிழ்ச்சி தகவல்.

தமிழில் வெளியாகும் ஜாக்கிசானின் போலீஸ் ஸ்டோரி..!ஜாக்கிசானின் அதிரடி ஆக்ஷனில் தயாராகி உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்துள்ள படம் போலீஸ் ஸ்டோரி. இதுவரை இப்படத்தின் ஆறு பாகங்கள் வந்துள்ளது. 6–வது பாகமாக உருவான ‘நியூ போலீஸ் ஸ்டோரி 2013’ படம் கடந்த டிசம்பரில் சீனாவில் ரிலீசாகி சக்கைபோடு போட்டது. அங்கு மட்டும் ரூ.400 கோடி வசூல் ஈட்டியது.

இப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து சுரபி பிலிம்ஸ் சார்பில் மோகன் அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். போலீஸ் அதிகாரியான ஜாக்கிசான் மகன் உள்பட 33 பேரை தீவிரவாதிகள் கடத்தி பிணையகைதிகளாக அடைத்து வைக்கின்றனர்.

அங்கு ஜாக்கிசான் கைதிபோல் ஊடுருவி வில்லன்களை துவம்சம் செய்து 33 பேரையும் எப்படி மீட்கிறார் என்பது கதை. ஆக்ஷன் காட்சிகளை அதிக பொருட் செலவில் எடுத்துள்ளனர். ஜாக்கிசானுடன் ‘லியுயே’ ‘ஜிங்டியன்’ நடித்துள்ளனர். டிங்ஷெங் இயக்கியுள்ளார்.

சூப்பர் நிலவு வெள்ளிக் கிழமை தோன்றும்..! மிஸ் பன்னாதிங்க....சூப்பர் நிலவு வெள்ளிக் கிழமை தோன்றும்! மிஸ் பன்னாதிங்க....


பூமி, சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிகழ்வால் வழக்கத்தை காட்டிலும் நிலவின் அளவு பெரிதாக காணப்படும்.

 இத்தைய நிகழ்ச்சிக்கு சூப்பர் நிலவு என பெயிரிட்டு அழைக்கப் படுகிறது.அத்தகைய நிகழ்வு இந்தாண்டு ஐந்து முறை நி்கழ்கிறது. இம் மாதம் முதல் தேதி நடந்து முடிந்துள்ளது.

அடுத்த நிகழ்வு வரும் வெள்ளி்க்கிழமை(31-ம் தேதி) நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூலை 12, ஆகஸ்ட் 10,செப்டம்பர் மாதம் 9-ம்தேதி ஆகிய நாட்களில் நிகழ உள்ளது.

 வரும் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி முதல் இதனை காணலாம் என விண்வெளி பவுண்டேஷனின் தலைவர் தேவ்கன் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த சூப்பர் நிலவு வரும் 2018-ம் ஆண்டு ஜனவரியில் தான் தோன்றும் எனவும் அவை தெரிவித்துள்ளது.

பூமியைச் சுற்றிவரும் சூரியன், சந்திரன் ஆகியவை இந்த ஆண்டு ஐந்து முறை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது.

அப்போது சந்திரன் சூரியனைவிட பூமியின் அருகில் வருவதால் அதனுடைய பிரகாசம் அதிகமாகவும், அளவு பெரியதாகவும் தெரியும் வாய்ப்பு உள்ளது.

 அளவில் பெரியதாகத் தோன்றும் இந்த சந்திரனே சுமார் 30 வருடங்களுக்குமுன் கடந்த 1979ஆம் ஆண்டில் சூப்பர் நிலவு என்று ரிச்சர்டு நொள்ளே என்ற வானவியல் ஆராய்ச்சியாளரால் பெயரிடப்பட்டது.

இந்த ஆண்டு இதுபோன்று ஐந்துமுறை இந்த மூன்று கோள்களும் ஒரே கோட்டில் வரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் நிகழ்வு இந்த மாதம் ஒன்றாம் தேதி ஏற்பட்டது. தற்போது வரும் வெள்ளிக்கிழமை அன்று இரண்டாவது முறை சூப்பர் நிலவு தோன்றும் என்றும் மாலை 3.30 மணிக்கு இதனைக் காண முடியும் என்றும் விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

 அந்த சமயத்தில் நிலவின் அளவு 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் அதிக பிரகாசமாகவும் காணப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் சி.பி.தேவ்கன் குறிப்பிட்டுள்ளார்.

சச்சினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்...?மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த பெனடிக்ட், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், ஜமைக்கா நாட்டில் நடந்த தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, இந்திய தேசிய கொடி வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டினார். இது அவமதிப்பு செயலாகும்.

இதற்கிடையில், பிரதமரின் பரிந்துரையின்பேரில் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 தேசிய கொடியை அவமதித்த சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்தது தவறு. அவரது பதவியை ரத்து செய்யவேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இம்மனுவை நீதிபதி சுதாகர், வேலுமணி விசாரித்தனர். மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, மாநிலங்களவை துணை தலைவர் மற்றும் டெண்டுல்கருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிந்துமாதவி, சுனேனா சம்பளத்தை கேட்டு இயக்குனர் ஓட்டம்..!பிந்துமாதவியும், சுனேனாவும் இப்போது எக்குத்தப்பாக சம்பளம் கேட்கிறார்களாம். அவர்களின் சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். விஜய் நடித்த சுறா, பிரபு நடித்த பொன்மனம், என் உயிர் நீதானே போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.பி.ராஜ்குமார். தற்போது பட்டைய கௌப்பணும் பாண்டியா என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆணிமுத்து தயாரிக்கிறார்.

 இதில், விதார்த், சூரி, இமான் அண்ணாச்சி, மனிஷா நடிக்கின்றனர். இதன் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இப்படம்பற்றி எஸ்.பி. ராஜ்குமார் கூறியதாவது: மினி பஸ்சில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டராக விதார்த், சூரி நடிக்கின்றனர். ஹீரோயினாக மனிஷா நடிக்கிறார். பொதுவாக, ஹீரோ, ஹீரோயின்கள் பெரும்பாலான காட்சிகளில் தாங்கள்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

தேவை இல்லாத காட்சிகளில்கூட தலைகாட்டுவார்கள். விதார்த்தை பொறுத்தவரை அந்த பிரச்னை இல்லை. ஒரு காமெடி காட்சியில் சூரி நடிக்க வேண்டியிருந்தது. அப்போது விதார்த்தும் அருகில் இருந்தார். அவரை பிரேமுக்குள் நிற்க வேண்டாம் என்றேன். உடனே ஓரமாகபோய் நின்று விட்டார். இப்படத்துக்கு ஹீரோயினை தேடுவதற்குள் பெரும்பாடாகி விட்டது.

காரணம், சில நடிகைகள் கேட்ட சம்பளம், எனக்கு ஷாக் கொடுத்தது. சுனேனா, பிந்துமாதவி இவர்களில் யாரையாவது ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று கால்ஷீட் கேட்கச் சென்றேன். ஆனால், அவர்கள் சொன்ன சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடிவந்து விட்டேன். ஜன்னல் ஓரம் படத்தில் நடித்த மனிஷாவை கேட்டபோது, நான் கொடுக்க நினைத்த சம்பளத்தைவிட குறைவாக பெற்றுக் கொண்டார்.

நடிகைகளுக்கு சம்பளத்தை அதிக அளவில் கொடுத்து விட்டு, பிறகு ஷூட்டிங் நடத்துவது எப்படி என்று தெரியவில்லை. இவ்வாறு இயக்குனர் ராஜ்குமார் கூறினார். -

பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போரிங்களா ? - அப்ப இத படிங்க...!
 பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போரிங்களா ?

அப்ப இத படிங்க...! முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்.
https://passport.gov.in/pms/Information.jspContinue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

 அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும். District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா) Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்) First Name: உங்களது பெயர் உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும் Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்.

Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY) Place of Birth: பிறந்த ஊர் District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும் Qualification: உங்களது படிப்பு Profession: தொழில் Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை) Height (cms): உயரம் Present Address: தற்போதைய முகவரி Permanent Address: நிரந்தர முகவரி Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை Phone No: தொலைபேசி எண் Mobile No : மொபையில் எண் Email Address: இமெயில் முகவரி Marital Status: திருமணமான தகவல் Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர் Father’s Name: தந்தை பெயர் Mother’s Name: தாயார் பெயர் தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்.

 பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும் உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண் Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள் Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம் File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்) Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள் [] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும் அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்

. பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம். முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு) · ரேசன் கார்டு · குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) ·

கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · வாக்காளர் அடையாள அட்டை · வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்) · துணைவின் பாஸ்போர்ட் பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_ · 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ் · பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ் · கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும் வேறு சான்றிதல்கள் · 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும் ·

உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ். · பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.

பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும். அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்…

Tuesday, January 28, 2014

500 ரூபாய் நோட்டு...?
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.

அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார் அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை.

ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம்
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.

 நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.

அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.

வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.

ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க...!

உலகத்தை பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க....!!* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.

* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.

* அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.

*அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.

* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).

* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.

* அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.

* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.

* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.

* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.

* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.

* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.

* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.

* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.

* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.

* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.

* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.

* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.

எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்..!வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது.          மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை தருகிறது.

பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மனநிலையில் இருக்கும் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் தான். இவை இருந்தால் எந்த பிரச்ச்னையையும் எதிர் கொண்டு வெற்றி பெறலாம்.

மேக் -எவ்ரிதிங் ஓகே இணையதளம் இதை தான் செய்கிறது . இந்த தளத்தில் அப்படி என்ன இருக்கிறது ? ஒரு பட்டன் இருக்கிறது. மாய பட்டன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அந்த பட்டன் மீது எல்லாம் சரி செய்யப்பட்டுவிடும் (மேக் -எவ்ரிதிங் ஓகே ) என எழுதப்பட்டிருக்கும். கம்ப்யூட்டர் விசைபலகையின் ஒரு விசை போல இருக்கும் அந்த பட்டனை அழுத்தினால் , எல்லாம் சரி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற வாசகம வரும்.அதன் பிறகு எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதாக குறிப்பிடப்படும். அப்படியும் எதுவும் சரியாகவில்லை என்றால், உங்கள் புரிதல் மற்றும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவும் எனும் ஆலோசனை வழங்கபடுகிறது.

எல்லாவ்ற்றையும் சரி செய்து கொள்வது நம்மிடம் தானே இருக்கிறது. எளிமையான இணையதளம். சுவாரஸ்யமானது. சிந்திக்கவும் வைக்ககூடியது.

இணையதள முகவரி; http://www.make-everything-ok.com/

ஆரோகியமாக இருக்க எப்படி நடக்க வேண்டும்..!
நடைப்பயிற்சி இன்றைய காலக்கட்டத்தில் சிறந்த பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச் சத்தின் (Low-density lipoprotein – LDL) அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமானதாக இருக்க விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய உடற்பயிற்சியாக உள்ளது.

வேகமாக நடத்தல் எனும் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதர இதயநோய்களின் தாக்குதல்கள் இப்பயிற்சியை மேற்கொள்ளாதவர்களோடு ஒப்பிடுகையில் பாதிக்கும் மேலாக குறைவாக உள்ளது என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.


நீங்கள் வேலைக்கு செல்லும் பயணத்தில் அதிகமாக நடக்க முனையுங்கள், ரயிலுக்கோ, பேருந்துக்கோ நடந்து செல்லுங்கள் , கடைகளுக்கு நடந்து செல்லுங்கள்., நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் நீண்ட நடை பயணம் சென்று நல்ல நேரத்தை செலவழித்து மகிழுங்கள்.

நடக்கும் முறைகள் :

1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல்) இருபது அடி முன்னோக்கியவாறு நடங்கள்.

2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருங்கள்.

3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்கவாட்டில் ஆட்டாமல்), அதேவேளை நெஞ்சுப் பகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..

4. உங்கள் அடிவயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்த்தவாறு நடங்கள்.

5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் நினைத்து கொண்டு, அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

6. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து ஆக்ஸிஜனை அதிகமான அளவில் உட்செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும் போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்ருதிஹாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்..!உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன் இன்று தனது 27 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இளவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன், தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் அனேகப் பாடல்களைப் பாடியுள்ளார். தனது ஆறு வயதில் தேவர் மகன் திரைப்படத்திற்காக, இளையராஜாவின் இசையில் பாடிய பாடலே இவர் முதன்முதலாகப் பாடிய பாடலாகும்.

அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ருதி, கமல்ஹாசன் எழுதி இயக்கிய ஹே ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த்
திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்திற்குப் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாகவும் மாறியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் தற்பொழுது ரேஸ்குரம் என்ற தெலுங்குப் படத்திலும், வெல்கம் பேக் மற்றும் கப்பார் ஆகிய ஹிந்தித் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார்.

ஸ்ருதிஹாசனுக்கு பிளஸ் மீடியா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தெலுங்கிலும் சிவகார்திகேயன்..!சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எதிர்நீச்சல்.

அறிமுக இயக்குனரான ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளியான இப்படம் தமிழில் ப்ளாக் பஸ்டர் படமாக
பட்டையைக் கிளப்பியது. இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையும் இப்படத்திற்குப் பக்கபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிக முக்கிய மைல் கல்லாக அமைந்தது என்றால் மிகையல்ல.

தமிழில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் ஜொலித்த இத்திரைப்படம் சென்ற ஆண்டில் அதிகமாக வசூலித்த திரைப்படங்களின் பட்டியலிலும் இடம்பிடித்தது. இப்படம் தெலுங்கில் ” நா லவ் ஸ்டோரி மொதலாயிந்தி” என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் வெளியாகவுள்ளது.

தமிழ் மக்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட சிவகார்த்திகேயன் - பிரியா ஆனந்த் ஜோடி தெலுங்கிலும் வெற்றிபெருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பறவைக் காய்ச்சல் பீதி: 20 ஆயிரம் கோழிகளை அழிக்க அரசு உத்தரவு..!

பறவைக் காய்ச்சல் பீதி: 20 ஆயிரம் கோழிகளை அழிக்க ஹாங்காங் அரசு உத்தரவு


சீனாவின் சந்திர புத்தாண்டு வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று பெருமளவில் விற்பனையாகும் என்று இறக்குமதி செய்யப்பட்ட 20 ஆயிரம் கோழிகளை பறவைக்காய்ச்சல் பீதியினால் முற்றிலும் அழித்துவிட ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் பறவைக் காய்ச்சல் வைரசான எச்7என்9 தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து திரும்பிய இரண்டு பேர் பறவைக்காய்ச்சல் நோய்க்குப் பலியானதைத் தொடர்ந்து ஹாங்காங்கில் இது குறித்த அச்சம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சீனாவில் இந்த மாதக் கணக்கின்படி இறந்த 22 பேருடன் இந்த நோய்த்தாக்கத்தினைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மிகவும் பாதிக்கப்பட்ட ஷிஜியாங் மாகாணத்தில் உள்ள அனைத்து கோழிக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஹாங்காங்கின் மொத்த கோழி விற்பனை சந்தையான சேங் ஷா வான், நோய்த்தொற்று நீக்கத்திற்காக 21 நாட்கள் மூடப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்கி இறந்த கோழிகளை பாதுகாப்பு உடைகளும், முகமூடிகளும் அணிந்துள்ள அதிகாரிகள் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி வெளியேற்றுவதை தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகின்றது. விற்பனை வாய்ப்பு நிறைந்த இந்த விடுமுறை நாட்களில் தங்களுடைய உற்பத்தியை விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகளும், பண்டிகை காலத்திற்கு கோழிகளை வாங்கமுடியாமல் நுகர்வோர்களும் அதிருப்தியுற்றுள்ளனர்.

கோழிகளை உள்ளே கொண்டுவரும் முன்னரே எல்லைப்புற சோதனைச் சாவடிகளில் இந்த பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். சந்தைக்குக் கொண்டுவரப்பட்டபின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் உள்ளூர் கோழிகளும் சேர்ந்து அழிக்கப்படுவதாக வர்ததகர்கள் குறிப்பிட்டனர். இந்த நஷ்டத்திற்கு அரசே பொறுப்பேற்கவேண்டும் என்றும் கூறிய சில வர்த்தகர்கள் நேற்று இரவு ஹாங்காங்கின் நிர்வாகக் கவுன்சிலின் தலைவர் லெயுங் சன்-இங் இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

எச்சரிக்கை - அறிந்துகொள்வோம்..!

விஷ உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

அதற்கான முதல் உதவி:

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

விஷ உயிரினங்கள் கடித்து விட்டதா...?

அதற்கான முதல் உதவி:
மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற இணையதளங்கள்..!கடவுளுக்கு அடுத்து இரண்டாவது மிக்பெரிய சேவை செய்துவரும் நல்ல எண்ணம் உள்ள  மருத்துவர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல காத்திருக்கிறார்கள். நம் நண்பர் இமெயில் மூலம் கேட்டிருந்தார் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு சொல்ல
ஏதாவது இணையதளம் இலவசமாக உள்ளதா என்று அதற்கான சிறப்பு பதிவு தான் இது.மருத்துவத்தை வைத்து காசு பார்க்க அலையும் கூட்டம் மத்தியில் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம் என்று வந்துள்ளது இந்த  இணையதளங்களும்.


முதல் இணையதள முகவரி :


ஆஸ்க் மெடிக்கல்  டாக்டர் இந்த இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு ஏற்படும் சிறு தலைவலியிலிருந்து காய்ச்சல், இரத்த அழுத்தம், போன்ற அத்தனை பிரச்சினைகளையும் நீங்கள் கேள்வியாக கேட்கலாம் உடனடியாக அந்தந்தத் துறையில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் நமக்கு பதில் அளிக்கின்றனர்.


 இரண்டாம் இணையதள முகவரி :மெட் கெல்ப் இந்த இணையதளத்திற்கும் உங்கள் உடம்பில் நோயினால் ஏற்படும் மாற்றங்களை கூறினால் அவர்கள் உங்களுக்கு எந்த மருந்து ஏற்றதாக இருக்கும் எவ்வளவு நாள் சாப்பிட வேண்டும் என்ற அத்தனை தகவல்களையும் கொடுக்கின்றனர் இதில் ஒரு இலவச கணக்கை உருவாக்கி
உங்கள் கேள்விகளை பதியலாம்.

அன்ரோயிட் கைப்பேசிகளில் அழகான ஹோம் ஸ்கிரீனை உருவாக்க உதவும் அப்பிளிக்கேஷன்..!

myColourScreen_001

தற்போது காணப்படும் கைப்பேசி இயங்குதளங்களில் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளம் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவ் இயங்குதளத்தில் அதனை வடிவமைத்தவர்களாலும், பயனர்களாலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதே இதற்கு காரணமாகும்.
இது தவிர பல புதிய அம்சங்களையும் இந்த இயங்குதளம் கொண்டுள்ளமையையும் குறிப்பிடலாம்.

தற்போது அன்ரோயிட் இயங்குதளத்தினை மேலும் பயனர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் விதமாக MyColourScreen எனும் தீம் (Theme) அப்பிளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் கைப்பேசியின் ஹோம் ஸ்கிரீனை அழகுபடுத்துவதற்கும், விட்ஜெட்களை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி கையாள்வதற்கும் உதவுகின்றது.தரவிறக்கச் சுட்டி

ஈறுகளில் ரத்தக் கசிவா? உங்களுக்கான வீட்டு வைத்தியங்கள்..!


 mouth

ஈறுகளில் வீங்கச் செய்து பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவு தான் இரத்தக்கசிவு நோய்.

இது பெரும்பாலும் வாய் ஆரோக்கியத்தை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதனாலேயே வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் சில சமயங்களில் உடல் ஆரோக்கியத்தை குன்றச் செய்யும் இதர நிலைகளான கர்ப்ப காலம், வைட்டமின் பற்றாக்குறை, ஸ்கர்வி என்றழைக்கப்படும் பல் வீக்க நோய், லுக்கேமியா என்றழைக்கப்படும் வெள்ளையணு புற்றுநோய், அல்லது இதர நோய்த்தொற்றின் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.

இது பெரும்பாலும் கொடிய நோய்களான இரத்தத்தட்டு நோய் அல்லது லுக்கேமியா போன்றவற்றின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இதனை ஒழுங்கான முறையில் கவனிக்காவிட்டால், ஜிஞ்சிவிட்டீஸ் என்றழைக்கப்படும் ஈறு வீக்க நோய் வர வழிவகுக்கும். இவ்வாறு ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவை எளிதான கை மருத்துவ முறைகள் மூலம் தவிர்க்கலாம்.

இதனால் அது பின்பற்றுவதற்கு எளிதானவையாக இருப்பதோடு, பல் ஆரோக்கியத்தை சில வாரங்களிலேயே மேம்படுத்தும்.


சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி குறைபாடு, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான பிரதான காரணங்களுள் ஒன்றாகும்.

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அதிக அளவிலான வைட்டமின் சி சத்தை வழங்கி, ஈறுகளின் இரத்தக்கசிவை தடுப்பதற்கு உதவக் கூடியவையாகும்.


பால்


பால் கால்சியம் சத்தின் தலைசிறந்த மூலாதாரமாகும். ஆகவே ஈறுகளை வலுப்படுத்த வேண்டுமெனில், உடலில் கால்சியம் சத்தை மீண்டும் மீண்டும் நிரப்ப வேண்டியது முக்கியம்.

எனவே ஈறுகளில் இரத்தக்கசிவை தவிர்க்க தினமும் தவறாமல் பால் அருந்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.


பச்சைக் காய்கறிகள்

பச்சைக் காய்கறிகளை நன்கு மென்று திண்பதன் மூலம் பற்கள் தூய்மையடைவதுடன், ஈறுகளில் இரத்த ஓட்டமும் தூண்டப்படும்.

ஆகையால், தினமும் ஒரு பச்சைக் காய்கறியை மென்று தின்னும் பழக்கத்தை மேற்கொள்வது நலம்.


க்ரான்பெர்ரி மற்றும் அருகம்புல் ஜூஸ்

க்ரான்பெர்ரி அல்லது அருகம்புல் சாற்றினை அருந்துவதன் மூலம் ஈறுகளின் இரத்தக்கசிவிலிருந்து நிவாரணம் பெறலாம்.

க்ரான்பெர்ரி சாறு அதன் ஆன்டிபாக்டீரியல் தன்மைகளை முடுக்கி விட்டு, ஈறுகளின் மேல் படிந்திருக்கக்கூடிய பாக்டீரியாக்களை துடைத்து, இரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கிறது.


பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா வாயில் இருக்கக் கூடிய மைக்ரோஎன்விரான்மெண்டை அமிலத்தன்மை கொண்டதாக மாற்றி பாக்டீரியாக்களைக் கொல்கிறது. அதற்கு பேக்கிங் சோடாவை விரல்களில் தொட்டு, ஈறுகளில் தேய்த்துக் கொள்ளலாம்.


கிராம்பு

கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மெல்லலாம் அல்லது கிராம்பு எண்ணையை ஈறுகளின் மேல் தேய்த்துக் கொள்ளலாம்.

இது பற்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய பழமையான மற்றும் எளிமையானதொரு கை வைத்தியமாகும்.


புதினா

எண்ணெய் பல் துலக்கும் போது வாயை புத்துணர்ச்சியோடும், தூய்மையாகவும வைத்திருக்கக்கூடிய புதினா எண்ணெயை உபயோகிக்கலாம்.

உப்புக் கரைசல்

பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொப்பளித்து வரலாம்.

இது ஈறுகளில் ஏற்படக்கூடிய இரத்தக்கசிவுக்கான மிகச் சிறந்த கை வைத்தியமாகும்.


மசாஜ்

பல் துலக்கிய பின் விரல்களைக் கொண்டு ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

இது ஈறுகளை வலுவாக்கி இரத்திக்கசிவிலிருந்து அவற்றை பாதுகாக்கும்.


புகைப்பிடிப்பதை தவிர்த்தல்

புகைப்பழக்கமானது வாயின் உட்புறங்களில் குறிப்பிட்ட சில பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் உயிர்வளியற்றதாக மாற்றும்.

எனவே வாயை பாக்டீரியாக்கள் இன்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனில், புகைப்பிடிப்பதைத் தவிருங்கள்.

சிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்..!கம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. அடுத்ததாக, இவற்றைக் கையாள்வது மிகவும் சிரமமான செயலாக அமைகிறது. ஒரு சில போட்டோக்கள், மீண்டும் மீண்டும் வெவ்வேறு போல்டர்களில் இருந்தால், எதனை அழிப்பது, எந்த போல்டரில் வைத்துக் கொள்வது என்பது நமக்கு எரிச்சல் தரும் செயல் தானே. அதிர்ஷ்டவசமாக, நமக்கு சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை நீக்கும் எளிய வழி ஒன்றைத் தருகிறது.

சிகிளீனர் புரோகிராமினை, நிச்சயமாக அனைவரும் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்திருப்பார்கள். விண்டோஸ் சிஸ்டத்தில், தேவையற்றவற்றை நீக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள இந்த புரோகிராமினை நாம் அனைவரும் பயன்படுத்தலாம். தற்காலிக இண்டர்நெட் பைல்கள், விண்டோஸ் சிஸ்டம் ஏற்படுத்தும் தற்காலிக பைல்கள், லாக் இன் சம்பந்தப்பட்ட பைல்கள், குக்கீஸ் என தற்காலிக பைல்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். இவை எல்லாவற்றையும் தானாக சிகிளீனர் நீக்குகிறது.

அது மட்டுமின்றி, விண்டோஸ் இயங்கும்போது, இயக்கப்படும் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப் விண்டோவில் சிகிளீனர் சரி செய்கிறது. தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்து நீக்க உதவுகிறது. ரெஜிஸ்ட்ரியில் உள்ள தேவையற்றை வரிகளை, குறியீடுகளை நீக்குகிறது. பைல்களை அழிக்கும் போது, அவற்றின் சுவடு தெரியாமல் முழுமையாக அழிக்கிறது. இதன் மூலம் நமக்கு ஹார்ட் டிஸ்க்கில் இடம் கிடைக்கிறது.தற்போது வெளியிடப்பட்டுள்ள சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை இனம் கண்டு நீக்குகிறது. இதனைச் செயல்படுத்த, சிகிளீனர் புரோகிராமினை இயக்கி, டூல்ஸ் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். டூப்ளிகேட் பைல் அறியும் டூலினைப் பெற, இதன் விண்டோவில், File Finder என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். ஏற்கனவே, சில ஆப்ஷன்கள் நமக்காக, சிகிளீனர் இன்ஸ்டால் செய்திடுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். அவை அப்படியே இருக்கட்டும்.

ஆனால், மிக முக்கியமாக, Ignore என்னும் வகையில், Modified Date under Match By என்பதிலும், File Size Under என்பதிலும், டிக் அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். சிஸ்டம் பைல்ஸ் என்று இருக்கும் இடத்தில் Ignore ஆப்ஷனில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், பல சிஸ்டம் பைல்கள், இரண்டு டைரக்டரிகளில் அல்லது இரண்டு போல்டர்களில் இருக்க வாய்ப்புண்டு. இவை, நீக்கப்பட்டால், சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்படலாம்.

இனி, கம்ப்யூட்டரில் உள்ள டூப்ளிகேட் பைல்களை எப்படி நீக்கலாம் என்பதனைப் பார்க்கலாம். மாறா நிலையில், சிகிளீனர், அனைத்து ட்ரைவ்களையும் தேர்ந்தெடுத்துக் காட்டும். கம்ப்யூட்டரே, சிகிளீனர் மூலம் ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டால், அந்த வேலை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, டூப்ளிகேட் பைல்கள் உள்ள போல்டர்கள் அல்லது ட்ரைவ்கள் எவை என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.


போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, பிரவுஸ் பட்டன் கிளிக் செய்து, வழக்கமான முறையில், போல்டர்களையும் பைல்களையும் தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்த பின்னர், Search பட்டனில் கிளிக் செய்தால், ஸ்கேன் தொடங்கப்படும். ஸ்கேனிங் முடிந்த பின்னர், சிகிளீனர், அது கண்டறிந்த டூப்ளிகேட் பைல்களைப் பட்டியலிடும். இரண்டு அல்லது அதற்கும் மேலான இடத்தில் உள்ள பைல்கள் தொடர்ச்சியாக இணைத்தே பட்டியலிடப்படும். எந்த பைலை நீக்க வேண்டுமோ, அவற்றை, அதன் அருகே உள்ள செக் பாக்ஸில், டிக் செய்து தேர்ந்தெடுக்கவும். சிகிளீனர் மீண்டும் ஒருமுறை, உங்களிடம், நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்களை உறுதியாக நீக்கவா என்றுகேட்கும். சரி என்று சம்மதத்திற்கென கிளிக் செய்தவுடன், டூப்ளிகேட் பைல் நீக்கப்படும்.

இனி பார்வையற்றவர்களாலும் காட்சிகளைக் காண முடியும் ! விசேஷக் கருவிக் கண்டுபிடிப்பு.!பார்வையற்றோர்  காட்சிகளைக் காண வழி செய்யும் ஒருவித விசேஷக் கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல வருடங்களாக கண்கள், பார்வை குறித்த ஆராய்ச்சியில்  ஈடுபட்டு வந்த ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் மூலம் காட்சிப் பதிவுகளிலிருந்து வரும் ஒளி அலைகள் (Light waves) பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்தக் கருவியில் ஒலி அலைகளாகப் (Sound waves)  பதிவு செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒலி அலைகளை  ஒளி அலைகளாக மாற்றி (காட்சி) அதனை மூளைக்கு அனுப்புகிறது. எனவே மனித மூளையில் உள்ள ஒளி உணரும் பகுதி, காட்சிகளை அப்படியே படம் பிடித்தாற்போல் உணர்ந்து கொள்கிறது.

இது குறித்து ஜெருசலேமிலுள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் அமிர் அமேதி கூறுகையில்;

இந்த நவீனக் கருவியில் ஒருவித கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா, காட்சிகளின் ஒளி அலைகளை உள்வாங்கி பதிவு செய்துகொள்ளும். இதனுள் உள்ள, ‘விஷுவல் வேர்டு ஃபார்ம்’ (Visual Word Form) எனும் தொழில்நுட்பம் காட்சிப் பதிவுகளுக்கான ஒலி மற்றும் ஒளியியல் மொழிகளைக் கொண்டுள்ளது.

எனவே ஒளி அலைகளை (Light waves) ஒலி அலைகளாக (Sound waves) மாற்றி மூளைக்கு அனுப்பும். மனித மூளையிலுள்ள காட்சிகளை உணரும் பகுதியில் இவை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றம் செய்யப்படுவதால் பார்வையற்றவர்களுக்கு காட்சிகளை நேராகக் காண்பது போன்ற உணர்வு ஏற்படும். மேலும் இந்தக் கருவியில் உள்ள, சென்சரி சப்ஸ்டியூசன்கள் காட்சிப் பதிவுகளை, ‘விஷுவல் டூ ஆடியோ - ஆடியோ டூ விஷுவல்’எனும் முறையில் காட்சிகளாக மாற்றம் செய்கிறது. இதற்கு  சவுண்ட் ஸ்கேப்"  (Sound Scape) என்று பெயர்.

தற்போது முதல் கட்டமாக இந்தக் கருவியை பார்வையற்றவர்களிடம் சோதனை செய்ததில் அவர்களால் காட்சிகளைத் தெளிவாகக் காண முடிந்தது. முதல் கட்ட ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த கட்டமாக முழுப் பணிகளும் முடிந்தபின் கருவியை ஒளி வெளியிடுவோம். இதன் மூலம்  பார்வையற்றவர்களின்  நீண்ட நாள் கனவு நிறைவேறும். அவர்களாலும் இந்த உலகத்தைக் காண முடியும்" என்கிறார் அமிர் அமேதி.

'கிணற்றுத் தவளையும்...கடல் தவளையும்'.........குட்டிக்கதை
ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது..அது அங்கேதான் பிறந்து வளர்ந்ததால் கிணற்றைத் தவிர அதற்கு எதுவும் தெரியாது.

ஒரு நாள் வேறு தவளையொன்று அக்கிணற்றுக்கு வந்தது...இரு தவளைகளும் பின் நட்புடன் பழக ஆரம்பித்தன...

ஒரு நாள் புது தவளை 'இந்தக் கிணறு சிறியதாக இருக்கிறது..நான் வாழும் இடம் பெரிது' என்றது.

'நீ எங்கே வாழ்கிறாய்?' என் கிணற்றுத்தவளை கேட்டது.

புதிய தவளை சிரித்தவாறே ....'நான் கடலிலிருந்து வந்தேன் ..கடல் மிகப்பெரியதாக இருக்கும்' என்றது.

'உன் கடல்..என் கிணறு போல இருக்குமா?' என்றது கிணற்றுத்தவளை...

அதற்கு புதிய தவளை ..'உன் கிணற்றை அளந்து விடலாம்...சமுத்திரத்தை யாராலும் அளக்கமுடியாது'என்றது.

'நீ சொல்வதை என்னால் நம்ப முடியாது..நீ பொய்யன்.உன்னுடன் சேர்ந்தால் எனக்கு ஆபத்து'என்றது கிணற்றுத்தவளை. மேலும்..'பொய்யர்களுக்கு இங்கு இடமில்ல.நீ போகலாம்'என கடல் தவளையை விரட்டியடித்தது.

உண்மையில் இழப்பு கிணற்றுத்தவளைக்குத் தான்.

நாமும் நமக்கு எல்லாம் தெரியும்..நாம் இருக்கும் இடமே உலகம்,,,நம் கருத்து எதுவாயினும் அதுவே சிறந்தது என எண்ணி...நம் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கிணற்றுத் தவளையாய் இருந்து விடக்கூடாது.