Thursday, January 30, 2014

விண்வெளியில் பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டர் – இந்திய இன்ஜினியரின் கண்டுபிடிப்பு!



விண்வெளி வீரர்களுக்கு சுடச்சுட பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டரை அமெரிக்காவில் உள்ள இந்திய இன்ஜினியர் உருவாக்கியுள்ளார்.இந்த 3டி பிரின்டர் 30 ஆண்டு காலம் உழைக்கும் திறன் படைத்தது.

 விண்வெளியில் நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் போதும், இந்த இயந்திரம் உணவு தேவையை ஈடுகட்ட மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

விண்வெளி பயணம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு பலவிதமான பாக்கெட் உணவுகள் மற்றும் டின் உணவுகள், குளிர் பானங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இருந்தாலும் அவைகள் சரிவிகித ஊட்டச்சத்து உணவாக அமைவதில்லை. மேலும், விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி நீண்ட கால ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உணவுப் பொருட் களை விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது.

விண்வெளியிலேயே உணவு தயாரிக்கும் நவீன இயந்திரத்தை உருவாக்க அமெரிக்காவின் நாசா மையம் விரும்பியது.

இதற்காக நாசா விடுத்த டெண்டரை, அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள இந்திய மெக்கானிக்கல் இன்ஜினியர் அஞ்சன் என்பவர் நடந்தும் ‘சிஸ்டம்ஸ் அண்ட் மெட்ரியல்ஸ் ரிசர்ச் கார்பரேஷன்’ (எஸ்.எம்.ஆர்.சி) என்ற நிறுவனம் ஸி78 லட்சத்துக்கு கடந்த ஆண்டு பெற்றது.

விண்வெளியில் சுடச்சுட பீட்சா தயாரிக்கும் 3டி பிரின்டரை, அஞ்சன் உருவாக்கியுள்ளார்.

இங்க் ஜெட் கலர் பிரின்டரில் இருக்கும் காட்ரிட்ஜ்கள் போல இந்த 3டி பிரின்டரில் இருக்கும் காட்ரிட்ஜ்களில் மைதா மாவு, தக்காளி பவுடர், சமையல் எண்ணெய், தண்ணீர், புரோட்டீன், மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ், ஸ்டார்ச், மசாலா மற்றும் நறுமண பவுடர்கள் இருக்கும்.

பட்டனை கிளிக் செய்தால் போதும், 3டி பிரின்டர் முதலில் மாவை தண்ணீரில் கலக்கி, கீழே பொருத்தப்பட்டுள்ள சூடான தகட்டில் ஸ்பிரே செய்யும்.

அது வெந்து கொண்டிருக்கும்போதே, தக்காளி பவுடர், எண்ணெய், ஸ்டார்ச், புரோட்டீன், மசாலா என ஒவ்வொரு பொருட்களையும் 3டி பிரின்டர் அடுக்கடுக்காக ஸ்பிரே செய்யும். 70 வினாடிகளில் சூடான பீட்சா தயாராகிவிடுமாக்கும் .

வீடியோ லிங்க்:http://www.youtube.com/watch?v=uphIwHFz0no

0 comments:

Post a Comment