Thursday, January 30, 2014

நயன்தாராவை நம்ம ஆளுன்னு சொல்லும் சிம்பு..அப்படினா ஹன்சிகா?



 பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு 'இது நம்ம ஆளு' என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது. சிம்புவிற்கு ஜோடி யார் என்பது குறித்து பெரிய விவாதம நடைபெற்று வந்தது.

நயன்தாரா தான் நாயகி என்று ட்விட்டர் தளத்தில் இயக்குநர் பாண்டிராஜ் அறிவிக்க, அன்று முதல் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு எகிறியது.

சிம்பு - நயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தன. படப்பிடிப்பு தளத்தில் இருவருமே நண்பர்களாகவே வலம் வந்து இருக்கிறார்கள். தங்களுக்குள் எதுவுமே நடக்காதது போல் இருவருமே நடந்து கொண்டதை படக்குழு ஆச்சர்யத்தோடு பார்த்தது.

சிம்புவுக்கு லவ் ஃபெயிலியர். அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு தான் நயன்தாரா. நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்காக அஞ்சு, ஆறு மாசம் காத்திருக்காங்க. அப்போ ரெண்டு பேருக்கும் இடையில் பூக்கும் காதல் தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்னைகள்... இது தான் படத்தோட கதை.

இப்படத்தில் நயன்தாராவை நாயகி ஆக்குவதற்கு முன்பு, 'கதவைத் திற காதல் வரட்டும்’ அல்லது 'லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு’ தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து இருக்கிறார் பாண்டிராஜ். நயன்தாராவை நாயகி ஆனவுடன் தற்போது 'இது நம்ம ஆளு' வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். ஏனென்றால் படத்தில் நயன்தாராவைப் பார்க்கும் போது எல்லாம் 'இது நம்ம ஆளு சார்' என்று கூறிக்கொண்டே இருப்பாராம். அது தான் தலைப்பிற்கு காரணமாம்.

ஹன்சிகா அப்படினு ஒருத்தங்க இருக்காங்களா.....?

0 comments:

Post a Comment