Tuesday, February 25, 2014

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது..!சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது, உற்று கவனித்தேன்..!

இலைக்கு வெளியே இரண்டு சோற்றுப்
பருக்கைகள் இறைந்து கிடந்தன, அவைதாம்
அழுதுகொண்டிருந் தன."எதுக்கு இப்படி அழறீங்க" என்று கேட்டேன்?.

அதில் ஒன்று கண்ணீரோடு தன் கதையைச் சொன்னது.

"ஒரு ஏழை விவசாயி...
கடனை உடனை வாங்கி விதை நெல் போட்டு, வயலை உழுது,
நாற்று நட்டு, களை பறித்து,பயிர் செய்து,
நீர் பாய்ச்சி ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர வைத்தார்..

நாங்களும் நல்லா வளர்ந்தோம், என்னோட சகோதர மணிகளில்
சிலரை எலிகள் நாசம் செய்தன..

பறவைகள் கொத்தித் தின்றன.. தப்பிப்
பிழைத்த நாங்கள் அறுவடைக்குத்
தயாரானோம்.

அறுத்து, களத்துக்கு கொண்டு வந்து,
தூற்றி அதிலும் வீணாகிப்போன
சகோதரமணிகள் தவிர்த்து பெரிய பெரிய
பைகளில் எங்களை அடைத்து வைத்தார்கள்.

அப்புறம் நெல் மணிகளிலிருந்து உமி நீக்கி எங்களை அரிசியாக்கும் போது காணாமல் போன சகோதரமணிகள்
நிறைய பேர்.

விற்பனைக்கு கடையில் வைத்திருக்கும்
போது மூட்டைகளில் விழுந்த ஓட்டைகளில் சிலரும்,
எடை போட்ட போது கொஞ்சம் பேரும் வீட்டுக்கு நீங்கள்
வாங்கி வந்த போது,

அரிசி களைந்து சமைக்கும்
போது என்று எல்லாவற்றிலும் தப்பிப்
பிழைத்து உங்களுக்கு உணவாகி உங்கள்
தட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

இத்தனை பேர் உழைப்பில் விளைந்த
என்னை.. பல இடர்ப்பாடுகளை கடந்து வந்த என்னை..
இப்படி வீணாக்கினால் அழாமல் என்ன
செய்ய?" என்றது.

உணவை வீணாக்காதீர்கள், தேவையில்லாத உணவுகளை வீனடிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு கொடுங்கள் அது கூட இல்லாமல் சிலர் இருக்கின்றனர்..

Saturday, February 1, 2014

விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..!


விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..!பொதுவாகவே ஆண்களை விட பெண்களின் செயல் திறன் பல வேலைகளில் சிறப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் ஆற்றலும், பல மொழி பேசும் ஆற்றலும் பெண்களுக்கு அதிகமாக இருக்கக் காரணம் அவர்களது மூளை தான் என்கிறது ஆய்வுகள்.

அதாவது, ஆணின் மூளையில் இருந்து பெண்ணின் மூளை வேறுபட்டு உள்ளது என்பது பல்வேறு எம்ஆர்ஐ ஸ்கேன்களின் ஆய்வு மூலமாக வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.

அதாவது, மூளையின் முன் பகுதியில் இருந்து பின் பகுதியை இணைக்கும் நரம்புகளை அதிகமாகவும், பலமாகவும் கொண்டதாக ஆண்களின் மூளை உள்ளது. அதே சமயம், பெண்களின் மூளையில் வலது மூளையில் இருந்து இடது புற மூளையை இணைத்த வகையில் நரம்புகள் பின்னப்பட்டு உள்ளன. இவையே, ஒரு வேலையை ஆண் செய்யும் விதத்துக்கும், பெண் செய்யும் விதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்கிறது மருத்துவம்.

அதாவது, ஒரு வேலையை எடுத்து செய்யும் போதும், அதில் முழு கவனம் செலுத்தும் போதும் ஆண்களின் மூளை சிறப்பாகவே செயல்படுகிறது. ஆனால், ஒரே சமயத்தில் இரு வேறு வேலைகளை அவர்களால் திறம்பட செய்ய முடியாது. அதே சமயம், பெண்களால் ஒரு வேளையை மிகவும் திறமையாகவும், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை எளிதாகவும் செய்ய முடியும். பொதுவாக பெண்கள் போனில் பேசிக் கொண்டே சமைப்பது, டிவி பார்ப்பது, வீட்டு வேலைகள் செய்வது போன்றவற்றை செய்வதை பார்த்திருப்போம்.

இது மட்டும் அல்ல வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு பணிக்கும் செல்லும் ஆற்றல் பெண்களுக்கு அதிகம் உள்ளது.

மூளை வேறுபாட்டினால் உள்ள சில இயல்பான குண நலன்களை பார்த்தால், வரைபடத்தைப் பார்த்தே ஒரு ஆணால், செல்லுமிடத்தை கண்டுபிடிக்க முடியும். ஆனால், அதற்கெல்லாம் நேரத்தை செலவிடாமல், மற்றவர்களிடம் முகவரி கேட்டு அதை புரிந்து செல்லும் குணம் பெண்களுக்கு இருக்கும்.

வெகு நாட்களுக்கு முன்பு சந்தித்த ஒருவரை நினைவு படுத்தும் ஆற்றல் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருப்பதாகவும், ஒரு வாகனத்தை மிகக் குறைந்த இட வசதி இருக்கும் இடத்திலும் லாவகமாக நிறுத்தும் முறை பெண்களுக்கு எளிதானது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த மூளையில் இருக்கும் வேறுபாடு பிறக்கும் போது அமைவதில்லை. சுமார் 15 வயதுக்கு மேல்தான் இந்த வேறுபாடு ஏற்படுவதாகவும், இளம் வயதை அடையும் ஆண் மற்றும் பெண்ணின் மூளையில் இந்த வேறுபாட்டை எளிதாக காணலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதே காரணத்தால் தான், 3 வயது ஆண் குழந்தையை விட, பெண் குழந்தைகள் எளிதாக பல வார்த்தைகளை பேசுவதற்கும் காரணம் என்று தோன்றுகிறது.

வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்து கொண்டால்....!பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன.

அதே சமயம் தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும். தன்னை விட பெரிய ஆண்களை திருமணம் செய்து கொண்டால், ஏதேனும் கஷ்டமான பிரச்சனையின் போது சரியாக முடிவெடுக்கத் தெரியவில்லையென்றால், அத்தகையவரை திருமணம் செய்து கொள்ளும் போது, ஈஸியாக சரிசெய்து விடலாம்.

எத்தகைய பிரச்சனைக்கு எப்படி நடக்க வேண்டும் என்று நன்கு தெரியும். ஆகவே இந்த வாழ்க்கைப் பாடத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையில் இருப்பார்கள்.

எனவே திருமணத்திற்குப் பின், வாழ்க்கையில் எந்த ஒரு பணப் பிரச்சனையும் இருக்காது. பின் எதிர்காலத்தில் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். வயது அதிகம் உள்ளவர்கள் எதையும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, குறும்புத்தனமாக ஏதாவது ஒரு செயலை செய்தால், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டு, கடுமையாக நடப்பார்கள்.

அதே சமயம் அவர்கள் குறும்புத்தனம் என்று நினைத்து ஏதேனும் செயலைச் செய்வது, நமக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும். வயது குறைவாக இருக்கும் பெண்கள் வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, ஆண்களும் ஒருவித நம்பிக்கையில்லாத கோபம் வரும்.

அது என்னவென்றால், வயது குறைவாக இருப்பதால், தன் மனைவி இளம் வயது ஆண்களுடன் நட்புறவுடன் பேசும் போது, கோபம் வந்து சண்டை போடுவார்கள். ஆகவே எதுவானாலும், சரியான புரிதல் இருந்தால், எந்த ஒரு வாழ்க்கையும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் சந்தோஷமாக செல்லும்Thursday, January 30, 2014

அனேகன்’ படத்தில் தனுஷ் நடிக்கும் நான்கு கெட்டப்புகள் - வெளியானது...அனேகன்’ படத்தில் தனுஷ் நடிக்கும் நான்கு கெட்டப்புகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் தனுஷ் மாறுபட்ட நான்கு வேடங்களில் நடிக்கிறார், அந்த நான்கு கதாபாத்திரங்கள் என்னென்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது.

சுருட்டை முடியுடன் நவநாகரீக இளைஞனாக ஒரு கதாபாத்திரம் என்றால், புரூசிலியை போன்று மற்றொரு கதாபாத்திரம், மூன்றாவது கதாபாத்திரம், ’குட்டி’யை போன்ற க்யூட் கெட்டப்.

காசிமேடு பின்னணியில் வரும் நான்காவது சர்ப்ரைஸ் கதாபாத்திரம் தான் இந்தப்படத்திற்கு ஹைலைட்டாம்.

ஆக மொத்தத்தில் மாறுபட்ட ஒரு படத்தை தர இருக்கிறார் கே.வி.ஆனந்த்.