Tuesday, January 28, 2014

விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிபெறவில்லையா..?



கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு குடியரசு தினத்தில் வெளியான திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ”ஏக் தீவானா தா” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு மற்றும் திரிசா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழில் இப்படம் பெரும்வெற்றியடைந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் இணைந்தது.

தமிழில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் இப்படத்தினை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது.

தமிழில் இப்படம் வெற்றியடைந்திருந்த போதிலும், இதன் ஹிந்தி ரீமேக்கான “ஏக் தீவானா தா” திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வியைச்
சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரதிக் பாபர் மற்றும் எமி ஜேக்சன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கின் மூலம் கிடைத்த வருமானத்தைத் தன்னுடன் கௌதம் வாசுதேவ் மேனன் பங்கிட்டுக் கொள்ளாததால் அவரைக் கைது செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் ஆர்.ஜெயராமன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், கௌதம் வாசுதேவ் மேனனை கைது செய்யக்கோரும் இவ்வழக்கினை வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி வரை இடைக்காலத் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment