Tuesday, January 28, 2014

சாலை விபத்து தடுப்பும், அவசர சிகிச்சையும்....



விபத்திற்கான காரணங்கள்

குடிப்பழக்கம், கவனக்குறைவு, கைபேசியை உபயோகித்து கொண்டே வாகனங்களை ஓட்டுவது, சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருப்பது,  அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, தலை கவசம் அணியாதது, வாகனங்களை சரியாக பராமரிக்காமல் இருப்பது, உறக்கமின்மை, அசதி, சீட் பெல்ட்  அணியாமல் வாகனத்தை இயக்குவது, போட்டி போட்டு கொண்டு வாகனங்களை இயக்குவது.

சாலை விபத்தை தவிர்க்கும் முறைகள்:

குடி மற்றும் போதையில் இல்லாத போது வாகனங்களை இயக்குவது, வாகனங்களை ஓட்டும் போது முழு  கவனம் சாலையில் இருக்க வேண்டும்.

கைபேசியே உபயோகிக்காமல் வாகனத்தை ஓட்டுவது, 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தனியாக வாகனங்களை  ஓட்டுவதற்கு ஊக்குவிக்காமல் இருப்பது, 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தனியாக வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்காமல் இருப்பது.

 சாலை  விதிகளை முறைப்படி கடைபிடிப்பது, தலை கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது.

சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு முதலுதவி:

அடிபட்டவரால் பேச முடிகிறதா, பெயர் என்ன? சீராக சுவாசிக்கிறாரா என்றும் நாடி துடிப்பையும் அறிய வேண்டும். உடனடியாக அவசர ஊர்தியை  வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மருத்துவரிடம் நடந்தவற்றை கூற வேண்டும். சுவாசம் இல்லை என்றால்  அடிபட்டவரின் வாயை திறந்து சுவாசிப்பதற்கு ஏதாவது இடைஞ்சல் இருக்கிறதா என்று அறிய வேண்டும்.

 ஏதாவது இடைஞ்சல் இருந்தால், வாயினுள்  ஆள்காட்டி விரலையோ அல்லது நடுவிரலையோ உள் செலுத்தி இடைஞ்சலை சரிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்யும் பொழுது, அடிபட்டவர் விரலை கடிக்கும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நாடித் துடிப்பு குறைந்து, சுவாசம்  குறைந்து காணப்பட்டால் வாய்க்கு வாய் சுவாசமும், வாய்க்கு, மூக்கு சுவாசம் கொடுக்க வேண்டும்.

வாயில் ரத்த கசிவு அல்லது வாந்தி எடுத்தால்  அவருடைய உடம்பையும், தலையையும் ஒரு புறமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். இதனால் புறை போவதை தவிர்க்கலாம்.

ஒரு புறமாக  படுக்க வைக்கும் பொழுது கீழ் இருக்கும் கை நீட்டியும், மேல் உள்ள கை அவருடைய மார்பின் மேல் இருக்க வேண்டும்.

இரத்தக்கசிவு அதிகமாக இருந்தால் அந்த பாகத்தை அழுத்தி பிடிக்க வேண்டும். நம்முடைய உள்ளங்கையை வைத்தோ அல்லது கைவிரல்களை  வைத்தோ அழுத்தி பிடிக்க வேண்டும்.

அடிபட்டவர் விழுந்திருக்கும் போது அவருடைய உடம்பின் நிலை மாறுபட்டு காணப்பட்டால் அவரை அசைக்க  கூடாது. உடனடியாக மருத்துவரின் சிகிச்சைக்கு கொண்டு போக வேண்டும்.

இவ்வாறு இருக்கும் போது குடிக்க தண்ணீர் கொடுக்க கூடாது.  ஏனென்றால் புறை ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும்.

நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு போகும் போது கவனத்தில் வைக்க வேண்டியவை.

நோயாளியை ஸ்ட்ரெட்சர் கொண்டு அவரை  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அவருடைய முதுகையும், கழுத்தையும் நேரடியாக வைக்க வேண்டும். நோயாளி நேராக படுத்திருக்க  வேண்டும்.

 கை அல்லது கால ல் ரத்த கசிவு இருந்தால், அப்பாகத்தை உயர்த்தி பிடித்து ரத்த கசிவை அழுத்தி பிடிக்க வேண்டும். அவர் தொடர்ந்து  மூச்சு விடுகிறாரா? அவருடைய நாடி துடிப்பும் சீராக இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும்.

0 comments:

Post a Comment