Tuesday, January 28, 2014

இந்திய தபால் துறை நாடு முழுவதும் ஏ.டி.எம். மையங்களை அமைக்கிறது..!



இந்தியா முழுவதும் 3,000 ஏ.டி.எம். மையங்களையும், 1.35 லட்சம் மைக்ரோ ஏ.டி.எம். மையங்களையும் அமைக்க இந்தியா தபால் துறை முடிவு செய்துள்ளதையடுத்து பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது.தபால் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஏ.டி.எம் மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுமார் 1,54,700 அலுவலகங்களை கொண்டுள்ள இந்திய தபால் துறை உலகிலேயே மிகப் பெரியது. 2012, மார்ச் மாத நிலவரப்படி, 24,969 நிர்வாக அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இவை ரூ.1,877 கோடி செலவில் வங்கி கிளைகளாக மேம்படுத்தப்பட இருக்கிறது.இந்த இந்திய தபால் துறையில் தபால் சேவை மட்டும் இன்றி சிறு சேமிப்பு, தங்கம் விற்பனை, இட்டுவைப்பு பத்திரம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உள்ளன.

இதற்கிடையில் தலைமை தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தேவைக்கு அலுவலகத்திலிருந்து பணம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க இந்தியா முழுவதும் தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம். சேவை வசதியை ஏற்படுத்த மத்திய தகவல் தொலைத் தொடர்புத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.4500 கோடி நிதியையும் ஒதுக்கி உள்ளதால் தலைமை தபால் அலுவலகங்களில் ஏ.டி.எம். சேவை திட்டத்தை தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதத்திற்குள் இந்தியா முழுவதும் தலைமை தபால் நிலையங்களிலும் ஏ.டி.எம். சேவை வசதி தொடங்குப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment